loading...
Sponser

5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles

5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles

tamil funny riddles
1) சிவப்பு மாளிகை இடப் பக்கத்திலும் நீல மாளிகை வலப் பக்கத்திலும் கருப்பு மாளிகை முன் பக்கத்திலும் இருப்பின் வெள்ளை மாளிகை எங்கிருக்கும்?
2) கடுமையான மழை நேரத்தில் ஒருவர் குடையின்றி பாதையில் நடந்துச் சென்றார், ஆனால் அவரின் ஒரு தலை மயிர் கூட நனையவில்லை, இது எப்படி சாத்தியம்?
3)நீங்கள் ஒரு பஸ் வண்டியை ஓட்டிச் செல்கிறீர்கள். முதல் தரிப்பிடத்தில் மூவர் இறங்கினர், இரண்டாம் தரிப்பிடத்தில் ஐவர் இறங்கினர். கடைசித் தரிப்பிடத்தில் அனைவரும் இறங்கினர். இங்கு கேள்வி என்னவெனில் பஸ் நடத்துனரின் கண்கள் எந்த  நிறமாக இருக்கும்?
4)ஒரு விமானம் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் விபத்துக்குள்ளானது. விபத்தில் தப்பியவர்களை எந்த நாட்டில் அடக்கம் செய்ய வேண்டும்?
5)ஒரு அப்பிள் மரக்கிளையில் 12 அப்பிள்கள் இருந்தன. அவ்வழியே 12 பேர் பயணித்தனர். அவர்களில் தலா ஒரு பழம் பறிக்க 11 அப்பிள்கள் மரத்தில் எஞ்சியிருந்தன. இது எப்படி?
 
விடை 5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles
1) அமெரிக்காவின் வொஷின்டனில் வெள்ளை மாளிகை இருக்கும்.
2) அவரது தலை மொட்டையாகும்.
3) உங்கள் கண்களின் நிறம்.  நீங்களே பஸ் நடத்துனர்.
4)உயிர் தப்பியவர்களை அடக்கம் செய்ய மாட்டார்கள். உயிரிழந்தவர்களையே அடக்கம் செய்வார்கள்.
5) “தலா” என்பது ஒருவனின் பெயராகும். மற்றையவர்கள் 11 பேரும் பழம் பறிக்கவில்லை.

9 thoughts on “5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Don`t copy text!