விடுகதைகள்
- படபடக்கும், பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
- தலையில் கிரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?
- நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன?
- எவ்வளவு ஓடினாலும் எனக்கு வியர்வை வராது. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன?
- கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?
- கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
- கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?
- இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா?
- மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து பிடித்திருப்பவர்களைக் காப்பாற்றும் என்னை இந்த இளம் பெண்கள் அழகுக்காகப் பிடித்துக் கொள்கிறார்கள். நான் யார்?
- நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. விடைதெரியுமா?
விடுகதைகள் – விடைகள்
- பட்டாசு
- அன்னாசிப் பழம்
- முடி
- நாய்
- தையல்காரர்
- படகு
- தண்ணீர்
- மிளகாய்
- குடை
- ஆமை
Previous Article
Airtel Super Singer Aajith
superr
super o super
Super o Super
extra more.
An act that men do everyday. May act only once in her life. What is impossible for women to return to work