loading...
Sponser

புத்திசாலி பையனின் புதிர்

புத்திசாலி பையனின் புதிர்
??????????????????
இவ் வருடம் ஒரு நாள் பூங்காவிற்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சுட்டிப் பையன் சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தான். நான் அவனிடம் “உன் வயது என்ன தம்பி?” என வினவினேன். அச்சுட்டிப் பையனோ என்னிடம் புதிராக பதில்ளித்தான். அப் புத்திசாலி பையனின் புதிர் என்னவெனில்,
” இரு நாட்களுக்கு முன் எனது வயது 10. அடுத்த வருடத்தினுள்  நான் 13 வயதை எத்திவிடுவேன். உங்களால் முடிந்தால் என் வயதையும் பிறந்த நாளையும் கூறுங்கள்” என்றான். நானோ சற்று நேரம் அதிர்ந்து நின்றேன். அப் புத்திசாலிப் பையனின் வயதையும் பிறந்த நாளையும் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

விடை புத்திசாலி பையனின் புதிர்

நான் அவனை சந்தித்த நாள் 2014-01-01
அவனுடைய பிறந்த நாள் 2002-12-31
அவனுடைய வயது 11
2015-12-31 (அடுத்த வருடத்தில்) இல் அவனது வயது 13

3 thoughts on “புத்திசாலி பையனின் புதிர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Don`t copy text!