தொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)
தொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)
இப் புதிர் மூலம் ஒருவரின் தொலைப்பேசி எண்ணின் இலக்கங்களை அறியலாம். டயலொக், மொபிடெல், எடிசலாட் ஹட்ச் என்பவற்றிற்கு பொதுவான 07க் ஐத் தவிர்து ஏனைய எண்களை அறியலாம்.உதாரணத்திற்கு ஒருதொலைப்பேசி எண் 0771234567 எனின் 71234567 இனை கண்டுபிடிக்கலாம். இதற்கு கணிப்பான் (calculator) அவசியம். பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.
- முதல் நான்கு எண்களை எடுக்கவும். இவ் உதாரணத்தில் 7123.
- அதனை 80ஆல் பெருக்கவும்- 7123*80=569840
- அத்துடன் ஒன்றைக் கூட்டவும்- 569840+1=569841
- பின் மீண்டும் 250 ஆல் பெருக்கவும்- 569841*250=142460250
- வந்த விடையுடன் தொலைப்பேசி எண்ணின் கடைசி நான்கு எண்களை கூட்டவும்- 142460250+4567=142464817
- மீண்டும் ஒரு முறை தொலைப்பேசி எண்ணின் கடைசி நான்கு எண்களை கூட்டவும்- 142464817+4567=142469384
- அத்துடன் 250 ஐக் கழிக்கவும்-142469384-250=142469134
- கடைசியாக வந்த விடையினை இரண்டால் வகுக்கவும்- 142469134/2 என்ன ஆச்சரியம்!142469134/2=71234567
இதனை கண்டுபிடித்த வழிமுறை இதோ
இக் கணித புதிரை பின்வருமாறு செய்கைபடுத்தலாம்.
- தொலைப்பேசி எண்ணை xxxxyyyy எண்ணுவோம்.
- முதல் நான்கு எண்களை xxxx என எடுக்கவும்
- அதனை 80ஆல் பெருக்க =xxxx*80
- அத்துடன் ஒன்றைக் கூட்ட xxxx*80+1
- பின் 250 ஆல் பெருக்க =250(xxxx*80+1)=20000*xxxx+250
- தொலைப்பேசி எண்ணின் கடைசி நான்கு எண்களை கூட்ட =20000*xxxx+250+yyyy
- மீண்டும் ஒரு முறை தொலைப்பேசி எண்ணின் கடைசி நான்கு எண்களை கூட்ட =20000*xxxx+250+yyyy+yyyy=20000*xxxx+2*yyyy
- கடைசியாக வந்த விடையினை இரண்டால் வகுக்க =10000*xxxx+yyyy
=xxxx0000+yyyy
=xxxxyyyy
Previous Article
Nice. But I can’t do
how to search mobile num