ஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES
ஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES
1) சில மாதங்கள் 31 நாட்களில் முடிவடைகின்றன. சில மாதங்கள் 30 நாட்களில் முடிவடைகின்றன. ஒரு வருடத்தில் எத்தனை 28 நாட்களைக் கொண்ட மாதங்கள் உள்ளன?
2) முப்பதை அரைவாசியால் பிரித்து பத்தைக் கூட்ட வரும் விடை எத்தனை?
3) ஓர் குளிரான இரவில் நீங்கள் வீட்டினுள் நுழைகிறீர்கள். உங்களிடம் ஒரே ஒரு தீக்குச்சி மட்டுமே உள்ளது. வீட்டினுல் ஓர் விளக்கு, ஒரு மெழுகுவர்த்தி மற்றும் விறகடுப்பு உள்ளது. நீங்கள் முதலில் எதனை எரியூட்டிவீர்கள்?
4) ஒரு மனிதன் தன் மகனை பாடசாலைக்கு காரில் ஓட்டிச் சென்றார். போகும் வழியில் நடந்த கோர விபத்தில் தந்தை அங்கேயே பலியானார். அயலவர்கள் பையனை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு வந்த வைத்தியரோ இது தன்னுடைய மகன் என்றார்! யார் இந்த டாக்டர்?
5) கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா?
விடை – ஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES
1) 12 மாதங்கள். எல்லா மாதத்திலும் 28 நாட்கள் வரும்
2) 70 எவ்வாறெனில், அரைவாசி என்றால் 1/2 அல்லது 0.5 ஆகும். எனவே (30/0.5)+10= 70
3)தீக்குச்சியை
4)பையனில் தாயாகும்
5) முட்டை. பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த டைனோசர் முட்டைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.