loading...
Sponser

உங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)

உங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)

1)ஆங்கிலம் வாசிக்க தெரிந்த உங்களுக்கான புதிர் இது.இப் புதிரில் எவ்விதமான வித்தையும் இல்லை. கீழே உள்ள இலகுவான ஆங்கில வாக்கியத்தை உங்களால் வேகமாக வாசிக்க முடியுமா?

FINISHED FILES ARE THE

RESULT OF YEARS OF SCIENTIFIC

STUDY COMBINED WITH THE

EXPERIENCE OF YEARS

ஒரு முறை வேகமாக வாசித்த உங்களுக்கான புதிர் இன்னும் ஒரே ஒரு முறை வாசித்து இவ் வாக்கித்தில் எத்தனை “F” எழுத்துகள் உள்ளன எனக் கண்டுபிடிக்கவும்.

2)கூட்டல் கணிதம் தெரியுமா? உங்கள் கணித திறமையை சோதிக்க இந்த எளிய கூட்டலிற்கு விடையை மனதால் வேகமாக கூட்டவும்.
முதலில் 1000 உடன் 40 ஐக் கூட்டவும்
அத்துடன் இன்னும் 1000 ஐக் கூட்டவும்
அதனுடன் 30 ஐயும் பின் இன்னும் 1000 ஐக் கூட்டவும்
வரும் விடையுடன் மேலும் 20 ஐக் கூட்டவும்
கடைசியாக மீண்டும் 1000 ஐக் கூட்டி மேலும் 10 ஐக் கூட்டவும்.
கணக்குப் புலிகள் சறுக்கும் இக் கூட்டலுக்கான விடை என்ன?

 

“உங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)” இற்கான விடைகள்

1) ஆங்கிலம் தெரிந்தவர்களின் விடை பெரும்பாலும் மூன்றாக இருக்கும். ஏனெனில் “OF” இலுள்ள F ஐ அதன்
உச்சரிப்பு வித்தியாசத்தின் காரணமாக மூளை கணக்கெடுத்திருக்காது.சரியான விடை ஆறு ஆகும்.

 

2) வேகமாக கணக்கிட்ட அதிகமானவர்களின் விடை 5000. ஆனால் சரியான விடை 4100. கடைசி கூட்டலில்
அவசரத்தில் 10,100,1000 குழம்பி தவறிழைக்க காரணமாகிவிடும்.4090+10=4100

1 thought on “உங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Don`t copy text!